நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்காந்தி

திருவனந்தபுரம் . டிசம்பர்.7

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளாக காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான  வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை, அராஜகம் மற்றும் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது.கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்,  பெண்களை கடுமையாக அடித்து உதைப்பது  பற்றிய செய்திகளை தினமும் படிக்கிறோம்,

மேலும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறை, அவர்களுக்கு எதிரான வெறுப்பு பரவி வருகிறது. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறை தாக்குதல், அவர்களின் நிலங்களை அபகரித்தல் போன்ற செயல்களும்  அதிகரித்துள்ளன.

 முழு அதிகாரத்தையும் வைத்திருக்கும் ஒருவர் வன்முறையை நம்பி நாட்டை வழி நடத்துவதாக கூறியுள்ள ராகுல் காந்தி,  பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக சாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *