தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் இன்று பேச்சு வார்த்தை: முதல்வர் பழனிசாமி

சேலம்.டிசம்பர்.6

 உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்து என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  சேலம்  மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.  உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற  தீர்ப்பு வரவேற்க தக்கது. தீர்ப்பின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் என்றார். தேர்தலை அறிவித்த பிறகு மக்களை சந்தித்து வெற்றி பெறுவதுதான் ஜனநாயக முறை ஆனால் தோல்வி பயம் காரணமாக  திமுக நீதிமன்றம் சென்றது. கடந்த 2016 ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக,நீதிமன்றம் சென்று தடைபெற்றது. மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் சென்றது. ஆனால் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.

மேலும் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது, அதில் வார்டுகள் ஒதுக்கீடு குறித்து பேசப்படும்.  கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *