மகளின் ஆத்மா சாந்தியடையும்-பிரியங்கா ரெட்டியின் தந்தை

ஹைதராபாத், டிசம்பர்-06

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில், முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர். அப்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற 4 பேரையும் போலீசார் எண்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

கால்நடை பெண் மருத்துவரின் தந்தை, கைதான 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதில், தமது மகள் இறந்த 10 நாட்களில், குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா அரசுக்கும், காவல்துறைக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *