பாபர் மசூதி இடிப்பு தினம்-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

சென்னை, டிசம்பர்-06

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது.

இந்த தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க டெல்லி, மும்பை, லன்கோ, பாட்னா ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய கோயில்கள், மசூதிகள், பள்ளிகள், கல்லூரிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான சாலைகளில் போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து தகவல் அளிக்கும்படியும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் தண்டவாளங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *