அதிமுக.வில் சேரவிடாமல் முக்கிய நிர்வாகிகள் சதி ..! ஜெ.தீபா

சென்னை.டிசம்பர்.5

அதிமுக.வில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தருவதாக சொன்னார்கள் ஆனால் கட்சியில் சேருவதற்கு முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான  தீபா, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்த பின்னரும் அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை என்றார்.

அதிமுகவில் சேர்வதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.  நானும் எனது ஆதரவாளர்களும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுள்ளோம், உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று தீபா கூறினார்.

மேலும் கட்சியில் எனக்கு கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்படும் என எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எங்கள் தொண்டர்கள் சென்ற போது அங்கு உரிய மரியாதை இல்லை என தீபா குறிப்பிட்டார்.

தமிழகத்தில்  தலைவர் பதவிக்கு எந்த வெற்றிடமும் இல்லை என்றும் திமுக.வில் ஒருபோதும் சேரமாட்டேன் என்றும் தீபா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *