கட்டாய ஓய்வு சுற்றறிக்கை உண்மையில்லை-தமிழக அரசு

சென்னை, டிசம்பர்-05

50 வயது பூர்த்தியடைந்த அரசு ஊழியர்கள் அல்லது 30 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த அரசு ஊழியர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு வழங்கவுள்ளதாகவும், அனைத்து துறை அலுவலர்களின் விவரங்களை உடனே அனுப்பி வைக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு என எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 50 வயது, 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால், கட்டாய ஓய்வு என வெளியான செய்தி உண்மையில்லை. அதேபோல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *