நடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – தமிழக அரசு

நடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, செப்-13

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான பரிந்துரையினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதுதொடர்பான முடிவினை மாநில அரசுகள் ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.

இதுதொடர்பாக மாநில அமைச்சரவையினைக் கூட்டி விவாதித்த பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே (2019-2020) பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த முடிவினை அடிப்படையாக வைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *