உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக அஞ்சுகிறது-ஜெயக்குமார்

சென்னை, டிசம்பர்-05

சென்னை ராயபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்

அன்னதான நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்: இந்த நாளில் அம்மா அவர்கள் கூறியது போல 50 ஆண்டுகள் அல்ல நூறு ஆண்டுகளும் அதிமுக தலைமையிலான ஆட்சி தான் நடைபெறும்.

எடப்பாடி பழனிசாமியின் உறவினர் திமுகவில் இணைந்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சுய லாபத்திற்கு ஏற்ப கட்சிகளில் இணைகிறார்கள் திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் உறவினர்கள் எங்கள் கட்சியிலும் இருக்கிறார்கள் எனவே முக்கிய நிர்வாகியின் உறவினர் இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம் அல்ல.

உள்ளாட்சி தேர்தலுக்கு தடைகோரி திமுகவினர் நீதிமன்றம் சென்று இருப்பதால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு காரணம் யார் என்பதை மக்கள் தற்பொழுது தெளிவாக புரிந்து கொண்டிருப்பார்கள் இத்தனை நாட்களாக மூடி மறைக்கப்பட்ட உண்மை இன்று வெளிப்பட்டிருக்கிறது திமுகவில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்வி பயம் உள்கட்சி பூசல் காரணமாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக துணிவில்லாமல் இருக்கிறது.

முன்னதாக நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது அதேபோல் நடைபெற இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *