விராட்கோலி சச்சினுக்கு நிகரானவரா ? பாக் வீரர் ரசாக் பேட்டி

கராச்சி.டிசம்பர்.5

 பாகிஸ்தான் கிரிக்கெட்  அணியின் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், சச்சின் தெண்டுல்கருடன் வீராட்கோலியை ஒப்பிட முடியாது என்று பேசியது  சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரசாக் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்‘பும்ரவை பேபி பவுலர் என்று கிண்டலடித்திருந்தார். எனது காலக்கட்டத்தில் ஜாம்பவான் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டேன். இவரது பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டிருப்பேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர் என்று கூறப்படும் விராட் கோலி குறித்த அவரது பேச்சு சர்ச்சையாகி உள்ளது. 1922-ல் இருந்து 2007 வரை விளையாடிய வீரர்களிடம்  கேட்டால், கிரிக்கெட் என்றால் என்ற என்பதை அவர்கள் கூறுவார்கள். அந்த காலக்கட்டத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வீரர்களை போன்று தற்போது உள்ளவர்களை கருத முடியாது.

அப்போது உலகத்தரம் வாய்ந்த மட்டையாளர்கள்,பந்து வீச்சாளர்கள் ஆல்ரவுண்டர்கள் என நிறைய வீரர்கள் இருந்தனர். தற்போது அந்த அளவிற்கு நீண்டகாலம் ஆடக் கூடிய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை.
டி20 போட்டி கிரிக்கெட்டையே மாற்றிவிட்டது.  ஆதிக்கம் செலுத்தும் வகையிலான, பந்து வீச்சு , பேட்டிங் மற்றும் பீல்டிங் தற்போது இல்லை.

எனவே இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு விராட் கோலி சிறந்த வீரர். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், சச்சின் தெண்டுல்கருக்கு நிகரான இடத்தை கோலிக்கு வழங்க இயலாது. அவருடன் யாரையும் ஒப்பிடவும் முடியாது என்று ரசாக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *