ஜாமீன் நிபந்தனையை மீறியுள்ளார் சிதம்பரம்-பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி, டிசம்பர்-05

ப.சிதம்பரம் முதல் நாளிலேயே நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் பிறகு நேற்று ஜாமீனில்  விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் பேட்டியளித்தார். மத்திய அரசு மீதும் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

இந்த நிலையில், “ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த முதல் நாளே ஜாமீன் நிபந்தனைகளை மீறியுள்ளார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என்ற நிபந்தனையை ஜாமீனில் கூறியிருந்தது.  ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவந்த முதல் நாளிலேயே, எந்த பொது கருத்தும் தெரிவிக்க கூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *