நீரவ் மோடி தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி.டிசம்பர்.5

வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை தப்பியோடிய பொருளாதர குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

நாட்டிலேயே மிகப் பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அம்பலமானது. பல நாடுகளில் வைர உற்பத்தி நிறுவனங்கள், வைர விற்பனைக் கடைகளை நடத்தி வந்த நீரவ் மோடி, அவரது உறவினரும் கீதாஞ்சலி குழுமத் தலைவருமான மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதக் கடிதங்களைப் பெற்று, அவற்றை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிக் கிளைகளிடம் கொடுத்து சுமார் ரூ.13,400 கோடி வரை கடன் பெற்றனர். இந்த உத்தரவாதக் கடிதங்களை வழங்கியதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பதிவேடுகளில் எந்த அலுவலகக் குறிப்பும் இல்லை. மேலும், அங்குள்ள கணினி சேமிப்பு மையத்திலும் அந்த விவரங்கள் இடம் பெறவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.

இந்த கடன் மோசடி கடந்த ஆண்டு ஜனவரியில் தெரிய வந்தது. ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனா். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், லண்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடி, கடந்த மாா்ச் மாதம் அங்கு ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் 28 நாட்களுக்கு ஒருமுறை காணொலி காட்சி முறையில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறாா். அப்போது முதல் அவரது நீதிமன்றக் காவல் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவரது நீதிமன்றக் காவல் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவா் மீதான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *