எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் திமுகவில் இணைந்தார்!!!

சென்னை, டிசம்பர்-05

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகன் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதால் தாம் ஸ்டாலின் தலைமையை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசமியின் சொந்த பெரியம்மா மகனும், அவரின் சகோதரருமான விஸ்வநாதன் திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.

அதிமுகவில் சேலம் மாவட்டம் நடுங்குலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

விஸ்வநாதன் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவராகவும், அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். இவர் தனது அண்ணனான முதல்வர் பழனிசாமி மீதும், கட்சி மீதும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது, அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என்பதால் திமுகவில் இணைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *