சிரியாவில் வான்வழி தாக்குதல் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

சிரியா, டிசம்பர்-05

சிரியாவின் வடக்குப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் பலியாகினர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரிபாத் நகரில் நடந்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள். பலர் காயமடைந்தனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கல்ஜிபிரின் கிராமத்திலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாக வில்லை. எனினும் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராக சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதால் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *