ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் : சேவைக் கட்டணத்தில் மாற்றம் – அமைச்சர் கடம்பூர் ராஜு

எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-13

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைனில் எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்கும் நடைமுறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *