ஜில் ஜில் ராணி பாடலுக்கு ஹாட் நடனம் ஆடிய இந்துஜா!

நடிகை இந்துஜா ஆடிய ஐட்டம் சாங் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை, செப்-13

தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் அழகான குடும்ப பெண் போல நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர். அதனை தொடர்ந்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மகாமுனி படத்திலும் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகை இந்துஜா சூப்பர் டூப்பர் என்ற படத்தில் ஜில் ஜில் ராணி என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். தற்போது அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை இந்துஜாவா இப்படி ஆடியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *