டெஸ்ட் தரவரிசையில் விராட்கோலி முதலிடம்

டிசம்பர்.4

ஐ.சி.சி  டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின்  கேப்டன் விராட் கோலி முதலிடம்  பெற்றுள்ளார்.

பன்னாட்டு  கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள  டெஸ்ட்   பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 928 முதலிடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன்  மூலம்  விராட் கோலி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பின்னுக்கு தள்ளி முதலிடைத்தை பெற்றுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் 923 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சும்,
 இந்திய வீரர் புஜாரா 4 வது இடத்திலும் ரகானே 6-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆசி வீரர் கம்மின்ஸ் முதலிடத்தை பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்கவின் ரபாடா இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் பும்ரா 5 வது இடத்தையும் அஸ்வின் 10 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

 ஆல்ரவுண்டர் தரவரிசையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் முதலிடம் பெற்றுள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா இரண்டாவதாக உள்ளார். அஸ்வின் 5வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *