கொசுக்கள் பெருகாமல் தடுக்க ”ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம்” – கோவை மாநகராட்சி பிரச்சாரம்

கோவை, டிசம்பர்-04

ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தை வலியுறுத்தி கோவை மாநகராட்சி தீவிர டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், குப்பைத்தொட்டியில்லாத நகரமாக்குதல், சாலைபாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகளில் சிறந்துவிளங்கிட ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தோடு டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

கொசுக்கள் நம் இல்லங்களில் பெருகாமல் பார்த்துக் கொள்வதே நம் ஆரோக்கியத்திற்கு அரணாகும். அதற்காக, ஸ்மார்ட்டா யோசிப்போம்… சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தை முன்னிறுத்தி புதிய டிஜிட்டல் பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தூய்மை திட்டங்களுக்கு அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்பதை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் உணர்த்துகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *