ரகசிய திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா – சஞ்சீவ்

ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் அண்மையில் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளனர்.

சென்னை, செப்-13

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செம்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, விளம்பர படங்களில் நடிப்பது, டப்மாஷ் வீடியோ, புகைப்படங்கள் என மிகவும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். மேலும் இந்தக் காதல் ஜோடியின் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் அவர்கள் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில் சஞ்சீவ் தனது டுவிட்டரில், எங்களின் திருமணம் ஆல்யா மானசா பிறந்தநாள் அன்றே முடிந்துவிட்டது. சில பிரச்சனைகளால் வெளியே கூறவில்லை, எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று தங்களது திருமண புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *