படிப்பை பாதியில் விட்டவர் விஜய் :எஸ்.ஏ. சந்திரசேகர்

சென்னை டிசம்பர்.4

 நடிகர் விஜய் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்ததாக  அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் எடிட்டர் மோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

 சென்னையில் சினிமா எடிட்டர் மோகன் எழுதிய தனிமனிதன் மற்றும் அவரது மனைவி வரலட்சுமி  எழுதிய வேலியற்ற வேதம் ஆகிய  இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர்கள்.எஸ்.பி முத்துராமன்,எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ்,நடிகர்கள் பிரபு,அர்ஜுன்,தயாரிப்பாளர் கலைப்புலி தானு,பாடலாசிரியர் பா.விஜய்,பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை நடிகர் ஜெயம் ரவி ,இயக்குநர் ராஜா ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்,  எடிட்டர் மோகனுக்கும் நிறைய  ஒற்றுமை உண்டு,நான் ரயிலில் டிக்கட் எடுக்காமல் திண்டுக்கல்,திருச்சி, என ஒவ்வொரு  ஷேசனா இறங்கி கடைசியில்  சென்னை வந்து சேர்ந்தேன், மோகன் நடந்தே வந்து சேர்ந்தார். நான் தங்கியிருந்து  வீட்டுப்பெண்ணையே(ஷோபாவை) காதலித்து திருமணம் செய்தகொண்டேன்.நான் கிறிஸ்துவன், மனைவி ஷோபா முதலியார். அதுபோல எடிட்டர் மோகன் முஸ்லீம் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டு பிராமண பெண் வரலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எங்கள் இருவருக்குமே இரண்டாவது முறை திருமணம் நடந்தது. என் மகன் விஜயை, படாதபாடுபட்டு  கை காலில் விழுந்து லயோலா கல்லூரியில் சேர்த்து விட்டேன், ஆனாவ் அவர் இரண்டாவது ஆண்டு படிக்க பிடிக்காம  சினிமாவில நடிக்க ஆசைப்பட்டு, படிப்பை பாதியிலே விட்டுவிட்டு நடிகர் ஆனார். எடிட்டர் மோகன் தனது மூத்த மக்ன் ராஜாவை இயக்குநராகவும், இரண்டாவது மகன் ரவியை நடிகராகவும் ஆக்கியுள்ளார்.வாழ்கையில் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு இன்று எல்லோரும் நல்லா இருக்கின்றோம் அவரது  மனைவி இறைவன் அவருக்கு கொடுத்த வரம் என்று சந்திரசேகர் பேசினார்.

பிரபு பேசுகையில், எங்கப்பா சிவாஜி வளர்த்து விட்டவர்களை என்றும் மறக்க கூடாது என்பார்.பழசை மறக்காதவர்கள் தான் நல்ல மனிதர்கள், அப்பாவுக்கு கேமரா முன்பு நடிக்கவும் சம்பாதிக்கவும் தான் தெரியும்,சம்பாதித்த பணத்தை சேமிக்க தெரியாது சித்தப்பா சண்மும் தான் அதை பாத்துகிட்டார். அதுபோல எடிட்டர் மோகன் குடும்பமும் இன்றைக்கு இருக்காங்க அவங்களுக்கு வாழ்த்துகள் என்று பிரபு கூறினார்.

விழாவில் பேசிய பாக்யராஜ், எடிட்டர் மோகன் மதுரை திருமங்கலத்திலிருந்து  சென்னைக்கு நடந்தே வந்து சினிமாவில்  வாய்ப்பு தேடியவர்,அவருக்கு மறைந்த நடிகர் தங்கவேல் அடைக்கலம் கொடுத்தார், பின்னர் சினிமாவில் சேர்ந்து எடிட்டர்,தயாரிப்பாளர்,இயக்குநர் என்று சாதித்துள்ளார். அவரவது மனைவி வரலட்சுமியும் அவரும் பிள்ளைகளை (இயக்குநர் ராஜா, ஜெயம் ரவி) , நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்துள்ளனர். பாக்யா புத்தகத்தில் எழுதுமாறு  மோகன் சாரிடம் கேட்டேன் தனி மனிதன்  புத்தகத்தை வெளியிடும் முன் எழுத முடியாது என்று கூறியதாக தெரிவித்தார்.  

 

 இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்,வாழ்க்கையில் விடா முயற்சியுடன் நம்பிக்கையுடன்  செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம் என்பதற்கு உதாரணம் எடிட்டர் மோகன் என்றார்.

நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபு, ஆனால் ஆரம்பத்தில் அவர்  உருப்படமாட்டார் என்று கூறினார்கள் ஆனால் அவர் நூறு படத்துக்கு மேல் நடித்து இளைய திலகம் விளங்குகிறார். பாக்யராஜ்  முந்தானை முடிச்சு கதை முழுவதையும் ஒரு பேப்பர் கூட இல்லாம ஏவிஎம் முதலாளிகளிடம் சொல்லி அசத்தியவர், நடிகர் விஜய் அப்பா(சந்திரசேகர்) அம்மா(ஷோபா) இருவரும் வடபழனியில் உள்ள ஒரு வாட்சுமேன் போஷன்ல தங்கியிருந்தாங்க…எடிட்டர் மோகன் மதுரையிலிருந்து நடந்தே வந்து சென்னை பாண்டிபஜார் பிளாட்பாரத்தில் படுத்து கஷ்டப்பட்டு  தனது உழைப்பு ,விடாமுயற்சி,தன்னம்பிக்கை ஆகியவற்றால் இன்று சினிமாவில் சாதித்துள்ளார். அவருக்கு யாரும்  சினிமாவில் சிபாரிசு செய்யல, இன்றைய இளைஞர்கள் இதை முன் உதாரணமா எடுத்துகிட்ட நம்பிக்கையோடு முயற்சி  செய்தா வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்று எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம், அமைதியான மனைவி ஆண்டவனுக்கு கூட அமையவில்லை,எடிட்டர் மோகனுக்கு வரலட்சுமி சிறந்த பண்பு நிறைந்த மனைவியாக கிடைத்துள்ளார் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *