காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர், டிசம்பர்-04

வடகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 4 ராணுவ வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்

காஷ்மீரின் வடக்கே குப்வாரா மாவட்டத்தில் தங்தார் பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ முகாம் அமைக்கப்பட்டு அதில் வீரர்கள் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் திடீரென நேற்று மதியம் பனிச்சரிவு ஏற்பட்டது.  இதில் 2 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர்.  இதேபோன்று காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் குரேஜ் பிரிவில் தவார் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  அவர்களில் 2 ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *