விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழக இளைஞருக்கு முதல்வர் பாராட்டு!!!

சென்னை, டிசம்பர்-04

நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்த, தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியனை நேரில் வரவழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.

நாசா செயற்கைக்கோள் நிலவின் தென்துருவ பகுதியை துல்லியமாக எடுத்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன. இதில், செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாட்களில் வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை, சண்முக சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *