சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் மோதல்: 6 வீரர்கள் பலி

ராய்பூர், டிசம்பர்-04

சத்தீஸ்கரில் இந்தோ – திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினருக்குள் ஏற்பட்ட மோதலால் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து 350 கி.மீ., தொலைவில் நாராயண்பூரில் இந்தோ – திபெத்திய எல்லை போலீசின் 45வது பட்டாலியன் கடேனர் முகாம் உள்ளது. இதில் பாதுகாப்பு படையினருக்குள் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும், எஸ்.பி., மோகித்கர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *