தலைவர் 168-ல் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை!!!

சென்னை, டிசம்பர்-04

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர்-168 படத்தில் ஜோடியாக நடிகை மீனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகளான கதாப்பாத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  காமெடியனாக சூரி இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும், ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் மூன்று நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை மீனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக எஜமான், முத்து, வீரா போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *