மேட்டுப்பாளையம் விபத்து: நேரில் சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் பழனிசாமி

மேட்டுப்பாளையம், டிசம்பர்-03

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக நடூர் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில், இடிபாடுகளில் சிக்கி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அறிக்கையின் வாயிலாக ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், விபத்திற்கு காரணமான சுற்றுச்சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், உயிரிழப்புக்கு காரணமான சுற்றுச்சுவர் விழுந்த இடத்தையும் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *