ஊராட்சித் தேர்தலில் 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள்

 சென்னை.டிசம்பர்.3

தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என  தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06ம் தேதி வெளியிடப்படுகிறது.  அன்றைய தினம் முதல்  வேட்புமனு தாக்கல் நடைபெறும், 

வேட்புமனு தாக்கல் செய்ய  டிசம்பர் 13ம் தேதி கடைசி நாளாகும்,வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை  16ம் தேதி நடைபெறும், 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளாகும்.

வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழ உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஆகிய   பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். ஒவ்வொரு வாக்களுருக்கும் 4 வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும்.

ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும், , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிறுத்திலும், மாவட்ட ஊராட்சிக் குழு  உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு பொதுவாக ஒரே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால், ஒரு வாா்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வாா்டுக்கு வெளிர் நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 தேர்தல் பணியில் 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் ஈடுபடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *