அடுத்த 3 நாள் கனமழை – வானிலை மையம் குளுகுளு செய்தி

தமிழ்நாட்டில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-13

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது, சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *