மேட்டுப்பாளையம் விபத்து: உயிரிழந்தோரின் உடல்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி

கோவை, டிசம்பர்-03

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேர்களின் உடலுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக நடூர் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகள் தரைமட்டமாகின. இதில், இடிபாடுகளில் சிக்கி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் நிதியுதவி அறிவித்தார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நந்தவனத்தில் வைக்கப்பட்டது.

அங்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் ஏகே.செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ. சின்னராஜ், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *