உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை.டிசம்பர்.2

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் நகராட்சி அமைப்புகளுக்கு  விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016ல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது திமுக தான்.

மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் சுரம்  வந்துவிட்டது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது. முதற்கட்டமாக ஊரக அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *