கோவையில் ரூ.7.41 கோடியில் மாநகராட்சி மண்டல அலுவலகம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தெற்கு மண்டல அலுவலகத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

குனியமுத்தூரில் கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கான  அலுவலக கட்டடம் ரூ. 7.41 கோடி மதிப்பில்  கட்டி முடிக்கப்பட்டது.புதிய கட்டடத்தை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார். முன்னனதாக அமைச்சர் வேலுமணிக்கு மேல தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது, கோவைக்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுக்க காரணம் – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சி துறையை எனக்கு வழங்கி பணியாற்ற வாய்ப்பு கொடுத்தது.  கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்தது மட்டுமின்றி 86 விருதுகள் மத்திய அரசிடம் இருந்து வாங்கி சாதனை படைத்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள வசதிகள் போன்று கோவையில் உள்ள குளங்களுக்கு படகு சவாரி, நடைபாதை, பூங்கா, உடற்பயிற்சி மையம், விளையாட்டு திடல் மற்றும் யோகா போன்ற அனைத்து வகையாகன ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டுவர உள்ளோம்.

 இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன் அடைய உள்ளனர். எனவும் அரசு அலுவலங்களுக்கு வருகை தரக்கூடிய பொதுமக்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். மக்களால் தான் இந்த பதிவியில் அமர்ந்துள்ளோம் என குறிப்பிட்டார். மேலும் முதலமைச்சர் ஒரு விவசாயியாக இருந்த காரணத்தில் தான் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் இராசமணி, மாநகராட்சி ஆணையர் ஸ்வரண்குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *