தமிழகத்தில் புதிதாக 4 மருத்துவக் கல்லூரிகள்..!! முதல்வர் பழனிசாமி

சென்னை.டிசம்பர்.2

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்  புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் இன்று 2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட 5224 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில்,திருநங்கை அன்புராஜுக்கு முதல் பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர், 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காணொலி கண் பரிசோதனை மையங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், புதிதாக அமைக்கப்பட உள்ள 9 மருத்துவக்கல்லூரிகளில் எட்டாயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *