ஸ்டாலினை புகழ்ந்து பேசியது ஏன்? பாஜக அரசக்குமார் விளக்கம்

சென்னை.டிசம்பர்.2

தமிழக முதல்வாராக திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் பொறுப்பு ஏற்பார் என பேசியது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் அரசக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில்  நேற்று நடைபெற்ற  திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் பேசிய பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். எம்.ஜி.ஆருக்கு அடுத்து எனக்கு பிடித்த தலைவர் ஸ்டாலின்; கூவத்தூர் கூத்து நடந்தபோதே அவர் முதல்வராகியிருப்பார்; ஆனால் ஜனநாயகத்த்தை மதித்து அமைதியாக இருந்தார்; காலம் வரும்போது நிச்சயம் முதல்வர் ஆவார், தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று அரசக்குமார் பேசினார்.  திமுகவினரையே  திகைப்படைய   செய்த  அரசக்குமாரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினர் கட்சித் தலைமை அரசக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பிவருகின்றனர்.

 இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரசக்குமார் , நான் பேசும் போது மிகவும் எதார்த்தமாக பேசினேன். நீண்டகாலமாக என்னுடன் நட்பில் இருப்பவர் ஸ்டாலின். என்னை எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பவர். தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் அவர் ஜனநாயக முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரின் எண்ணம் வெற்றி பெறும் என்று நாகரிகமான முறையில் பேசினேன். அடுத்த தேர்தலில் அவர்தான் முதல்வர் என்று நான் கூறவில்லை. மற்றபடி இதைத் திட்டமிட்டுப் பேசவில்லை. யதார்த்தமாக வந்த வார்த்தையை சிலர் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.” நான் எதையும் திட்டமிட்டு  பேசவில்லை. இதை அரசியலாக்கி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பரப்பி வருவது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
அதிலும் அது என்னுடைய தனிப்பட்ட உணர்வு. இது பாஜகவின் குரல் கிடையாது. பாஜகவின் அறிக்கை கிடையாது. ஸ்டாலினை வாழ்த்தியதற்காக பாஜக என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும். அதை நான் ஏற்க தயார் என்று அரசகுமார் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *