தனியார் செல்பேசி கட்டணங்கள் உயர்வு: ராமதாஸ் கண்டனம்

ஜியோ, வோடோபோன், ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து  டாக்டர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தனியார் செல்பேசி கட்டணங்கள் ஒரே நேரத்தில் 45% வரை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் கொள்ளை லாபம் ஈட்டிய இந்த நிறுவனங்கள் இப்போது சரிவிலிருந்து மீள இப்போது நுகர்வோர் தலையில் பெரும் சுமையை சுமத்துவது நியாயமல்ல. இதை டிராய் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை மத்திய அரசின் பி.எஸ்.என்.எல், தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ரியலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா ஆகியவை வழங்கி வருகின்றன. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவைகளை வழங்கி வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் நேற்று ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் செல்போன் நிறுவனங்கள் தொலைத்தொடர்புக்கான சேவை கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *