குஜாராத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா ஆசிரமம் மூடல்

அகமதாபாத்.டிசம்பர்.2

குஜராத்தின் ஹிராபுர் பகுதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமம்  சட்டவிரோதமாக  செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாத்தால்  மூடப்பட்டது.


ஹிராபுர் பகுதியில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தனியார் பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக நித்தியானந்தா ஆசிரமம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயல்பட அனுமதி உள்ளதாக நித்தியானந்தா ஆசிரம நிர்வாகம் அளித்த சான்றிதழும் போலி என தெரியவந்தது.  இதனையடுத்து ஆசிரமம் செயல்படுவதற்கான உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டதுடன்

பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரமம் உடனடியாக மூடப்பட்டது. ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

ஜனார்த்தன சர்மா என்பவர், இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்கள் லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோரை மீட்டுத் தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்  ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *