தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை.டிசம்பர்.2

 தமிழகத்தில்   கோவை,நீலகிரி,கடலூர்,நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை  தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது, 17 இடங்களில் கன மழையும் மூன்று இடங்களில் மிக கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழையும் குன்னூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று பாலச்சந்திரன்  கூறினார்.

மேலும் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்  கன மழையை பொருத்தவரை அடுத்த 24 நேரத்தில் கோவை,நீலகிரி,கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை,  திண்டுக்கல்,தேனி,குமரி ,நெல்லை ,தூத்துக்குடி ஆகிய கனமழை பெய்யும்  என்று தெரிவித்தார்.

டிசம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் மன்னார் வளைகுடா கடல் தீவுகள் இலட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவே மீனவர்கள் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச் சந்திரன் கூறினார்.

அக்டோபர் முதல் இன்று வரை தமிழகத்தில் 40 சென்டிமீட்டர் மீட்டர் மழை பெய்துள்ளதாகவும்,இயல்பை விட 11 சென்டிமீட்டர் கூடுதலாக வடகிழக்குப் பருவ மழை கிடைத்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று பாலச்சந்திரன்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *