வீடுகள் இடிந்து விழுந்த விபத்து: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம்

கோவை.

 மேட்டுப்பாளையம்  அருகே கனமழையில்  வீடுகள் இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா  4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நடூர் பகுதியில் 4 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இன்று அதிகாலை நடந்த துயர சம்பவத்தில், சிறுவர்கள், உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.  இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் செல்ல  உள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *