மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி

கோவை.டிசம்பர்.2

 மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக  4 வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் கனமழையில் 4 ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த  துயர சம்பவத்தில், 2 சிறுவர்கள், 7 பெண்கள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை  பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மேட்டுப்பாளையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *