மழை நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவு

மழை நிவாரணப் பணிகளை விரைந்து  மேற்கொள்ள  முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை.டிசம்பர்.2

தமிழகத்தில்  மழை, வெள்ளம் பாதிக்ககப்பட்டுள்ள பகுதிகள்  மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமா பெரும்பாலான மாவட்டங்களில்  கனமழை கொட்டிவருகிறது. இதனால் கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கோவை,  உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பல்கலை கழகம் சார்பில் நடைபெற இருந்த தேர்வுகளும் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தென்காசி, நெல்லை,தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப்பணிகள், நிவாரணப்பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்  உதயகுமார், ஜெயக்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும்  ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் காற்றதழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ள நிலையில், கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து மேற்கொண்டு வரும் மீட்பு பணிகள் குறித்தும் முதலமைச்சர்  கேட்டறிந்தார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்த நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு  முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.தேசிய பேரிடர் மீட்புபடை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடவும் இந்த கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *