பாஜகவில் இணையும் புகழேந்தி? – டிடிவி தினகரனுக்கு அடிமேல் அடி

அமமுகவின் செய்திதொடர்பாளர் புகழேந்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்து.

சென்னை, செப்-13

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு, அமமுக கட்சியில் இருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்த வண்ணம் இருந்தனர். தினகரன் கட்சியில் முக்கிய நபர்களாக வலம் வந்த தங்கத்தமிழ்செல்வன்,செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா வெளியேறியது அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே போல் கடந்த வாரம் புதுச்சேரி நிர்வாகிகள் பலர் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி தினகரனை திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூட இவர் இல்லை என்று பேசுவது போல் இருந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி பேசியது உண்மை என, ஒப்புக்கொண்ட புகழேந்தி, அதை, அ.ம.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தியதாக, குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் டிடிவி.தினகரன் கண்டிப்புடன் கூறியிருந்தார்.

இதனால், அ.ம.மு.க.,வில் நீடிக்க முடியாத நிலைமை, புகழேந்திக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே, அவரை, தி.மு.க.,வில் இழுக்க செய்தில்பாலாஜி மற்றும் தங்க தமிழ்செல்வன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், புகழேந்தி, கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்ய விரும்புவதாக தகவல் தெரிவிக்கின்றன. தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் ஆளுங்கட்சியான பாஜகவில் இணையலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து, டிடிவி தினகரன் குறித்து புகழேந்தி புகார் கூற உள்ளதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *