உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: ஊரக அமைப்புகளுக்கு டிச.27,30 தேதிகளில் 2 கட்ட வாக்குப்பதிவு

 

 சென்னை.டிசம்பர்.2

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிராம  ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்,   ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினர், மாவட்ட  ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட 1,18,974 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.  இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 6ந் தேதி தொடங்குகிறது, வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 13 ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர்16ந் தேதி நடைபெறும், மனுக்களை திரும்பப்பெற டிசம்பர் 18  கடைசி நாளாகும்.

தேர்தல்  நாட்களில் காலை 7 மணி  தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.   தேர்தலுக்குகா நான்கு  வண்ணத்திலான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ந் தேதி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு ஜனவரி 6ந் தேதி நடைபெறும்

மாவட்ட ஊராட்சிக் குழுத்  தலைவர்,ஒன்றிய குழுத் தலைவருக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *