அரசின் உத்தரவு தனக்கு பொருந்தாது-பொன்.மாணிக்கவேல்

சென்னை, நவம்பர்-30

மதுரை மாவட்டம், டி.அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல், 61. காவல் துறையில், 1989ல், ராமேஸ்வரம், டி.எஸ்.பி. டி.ஐ.ஜி., டி.ஜி.பி. ஐ.ஜி.யாகவும் பணிபுரிந்துள்ளார். பின்பு, சென்னை உயர் நீதிமன்றம், இவரை ஓர் ஆண்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

அதன்படி, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், இன்றுடன் (நவ.,30) நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் அவரது சார்பில், வழக்கறிஞர் மணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை, டிச., 6க்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், பணிக்காலம் முடிவடைவதால், ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை இன்றைக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு பதிலளித்து பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பதில்: தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தனக்கு பொருந்தாது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க என்னை நீதிமன்றம் தான் நியமித்தது. இதனால், அரசின் உத்தரவு தனக்கு பொருந்தாது.
சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்ததை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. நீதிமன்றம் உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க எனக்கு அனுமதியில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பு வரும் வரை அரசு காத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *