6 மாதத்தில் அபரிமிதமான வளர்ச்சி-மோடி பெருமிதம்

டெல்லி, நவம்பர்-30

மத்தியில் பாஜக அரசு பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முதல், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

பெரு நிறுவனங்களுக்கான வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டது, பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமாக அளிக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் நாடு முழுவதும் 14 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி நேரடியாக வழங்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *