மராட்டிய சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

மும்பை, நவம்பர்-30

மகாராட்டிய மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் அமைச்சரகளாக பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன் மூலம், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அமைக்கப்பட்ட ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *