ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்-சிதம்பரம்

டெல்லி, நவம்பர்-30

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாக இருந்த நிலையில் அதைக்காட்டிலும் மோசமாக 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி கண்டுள்ளது

கடந்த 2018-19-ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் ஜிடிபி 7 சதவீதமாக இருந்தநிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 4.3 சதவீதமாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டில் ஜிடிபி அனைவராலும் பரவலாக கணிக்கப்பட்டதுபோலவே 4.5 சதவீதமாக வளர்ச்சி குறைந்துவிட்டது. இன்னும் மத்திய அரசு அனைத்தும் நலமாக இருக்கிறது என்று கூறிவருகிறது

மூன்றாம் காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கப் போவதில்லை, அனைத்தும் இன்னும் மோசமாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு டிவிட்டில் ஜார்கண்ட் மாநில மக்களுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “ஜார்கண்ட் மாநில மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். பாஜகவின் கொள்கைகளையும், நிர்வாக முறையையும் நிராகரித்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்குத்தான் முதல் வாய்ப்பாக இது அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *