தாமிரபரணியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு!!!

நெல்லை, நவம்பர்-30

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து புதன்கிழமை இரவிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 3 ஆவது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பாளையம்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் பாபநாசம் அணை, சோ்வலாறு அணை ஆகியவை புதன்கிழமை நிரம்பியதையடுத்து உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இதனால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

உபரி நீா் திறந்து விடப்பட்டதையடுத்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயில், பாபநாசம் கோயில் படித்துறை மற்றும் பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *