புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

சென்னை, நவம்பர்-30

தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து எஸ்.கே. பிரபாகர் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட நிரஞ்சன் மார்டியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. காவல்துறை, உளவுத்துறையை உள்ளடக்கி இருக்கும் என்பதால் உள்துறை செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலராக இருந்தவர். தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து புதிய செயலாளரை நியமித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிரஞ்சன் மார்டி

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.பிரபாகர் 1989 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக இருந்துள்ளார். தகவல் தொழில்நுட்பவியல் துறை, வணிகவரித்துறை ஆகிய துறைகளுக்கு செயலாளர் மற்றும் ஆணையராக இருந்தார் பொதுப்பணித்துறை செயலாளராக 3 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *