நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழை எச்சரிக்கை!!!

சென்னை, நவம்பர்-30

அடுத்து 24 மணி நேரத்தில் நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் இன்று கடலோர மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்

பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்புள்ளது. குறிப்பாக நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும் 8 மாவட்டங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு 16 சென்டிமீட்டர் மழையும் புதுக்கோட்டையில் 14 சென்டிமீட்டர் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சூறாவளி காற்று 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வசப்படுவதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடல் மற்றும் மாலை தீவு பகுதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *