எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாடு பயணம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, செப்-13

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 13 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதன் பின்பு தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடையாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எடப்பாடி வெளிநாடு பயணம் சென்றதை தொடர்ந்து அடுத்து ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஓபிஎஸ் செல்ல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்பு திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) உள்ளிட்ட துறைகளையும் கவனித்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டு யுக்திகளை பார்வையிட்டு மேற்கண்ட துறைகளை மேம்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று வர முடிவு செய்துள்ளார்.

குறைந்த இடத்தில் அதிக வசதிகளுடன் கட்டிடங்களை கட்டுவது எப்படி? குடிசை மாற்று வாரிய வீடுகளை பொலிவுடன் அமைத்து கொடுப்பது எப்படி? நகர்ப்புற வளர்ச்சியை எவ்வாறு திட்டமிடுவது போன்றவற்றை கண்டறியவும் சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *