ஜார்க்கண்டில் 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு

ராஞ்சி, நவம்பர்-30

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 9 மணிவரை நிலவரப்படி 11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா-காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுபூர் எனும் இடத்தில் உள்ள தரைப்பாலத்தை நக்சலைட்டுகள் இன்று வெடிகுண்டு மூலம் தகர்த்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

ஜார்கண்டில் உள்ள சதாரா, கும்லா, பிஷுன்பூர், லோஹர்தாகா, மணிகா, ரேட்கர், பங்கி, தால்தோகாஞ்ச், பிஷ்ரம்பூர், சதார்பூர், ஹூசைன்பாத், கார்வா, பவாந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 13 தொகுதிகளில் 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 11சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையத்தின் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தொகுதிகளில் மாலை 3 மணிவரை மட்டுமே வாக்குப்பதிவு நடக்கிறது.

முக்கிய வேட்பாளர்களாக பாஜக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் ராமச்சந்திர சந்திரவான்சி பிஷ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரான், லோகர்தாகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *