மக்களுக்கான எளிமையான முதல்வர், எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்

சென்னை, நவம்பர்-29

சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடக்க விழா, அதன் வளாகத்தில் இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், துரைக்கண்ணு உள்ளிட்டோரும் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக, விழா மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெற்றுக்கொண்டார்.

விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: சென்னை மாநகராட்சியை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரித்து நீரை வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சிப்காட் தொழிற்சாலைகள் மற்றும் ஹுண்டாய் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் பட்சத்தில் ரூ.107 கோடி வருமானம் அரசிற்கு கிடைக்கும்.

திடீரென்று முதலமைச்சர் பழனிசாமி வந்துவிட்டார் என்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்த காலம் முதல் பல்வேறு நலத்திட்டங்களை பார்த்து வருபவர். ஒரு சாமானியன் எப்படி முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே உதாரணம். மக்களுக்கு தேவையான எளிமையான முதலமைச்சர் பழனிச்சாமி.

ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வாங்கியுள்ளோம். இது எத்தனை பெரிய சாதனை. சுய உதவித் குழு திட்டத்தில் மிக சிறப்பாக இந்தியாவிலேயே 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளோம். சாமானிய, விவசாயி முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும் அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அவர்களும் உள்ளனர்.  இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *