தமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும்-கோத்தபய ராஜபக்சே

புதுடெல்லி, நவம்பர்-29

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவர்கள் பிரச்சினை, இலங்கை- தமிழர் பிரச்சினை குறித்தும், இரு நாடுகளின் உறவு மேம்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வலிமையான பிணைப்பு உள்ளதாகவும், இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் இந்திய பிரதமர் மோடி கூறினார். 

இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்க 50 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசும்போது, ‘இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் படகுகள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்தார்.

‘பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம்’ என்றும் கோத்தபய குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *